3 போட்டியில் 98 ரன்கள்; சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த கேப்டன்? பத்ரிநாத் பரபரப்பு பேட்டி!
சுப்மன் கில் தமிழ்நாடு வீரராக இருந்திருந்தால் எப்போதோ அணியிலிருந்து தூக்கியிருப்பார்கள் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.
சுப்மன் கில்
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராஃபிக்கான தொடர் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 25 ஆம் தேதி முடிவடைந்தது.இதில் இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராஃபிக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.இந்திய அணியில் சீனியர் வீரர்கள் முதல் அடுத்த தலைமுறை வீரர்கள் போட்டியில் தங்களது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று பிபிசிஐ நிர்வாகத்தால் சுப்மன் கில் முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அவரே 3 போட்டியில் விளையாடிய சுப்மன் கில் வெறும் 93 ரன்களை மட்டுமே எடுத்தார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சுப்மன் கில் தொடர்ச்சியாகச் சொதப்பி வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளில் அவர் வெளிநாடுகளில் ஆடிய ஒரு இன்னிங்ஸில் கூட 40 ரன்களை எட்டவில்லை என்று விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய மண்ணில் மட்டும் ரன்களை அடித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கான வீரர் என்று சில நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
பத்ரிநாத் விரக்தி
இந்த நிலையில் சுப்மன் கில் தமிழ்நாடு வீரராக இருந்திருந்தால் எப்போதோ அணியிலிருந்து தூக்கியிருப்பார்கள் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியிருப்பதாவது ,''சுப்மன் கில் தமிழ்நாடு வீரராக இருந்திருந்தால் எப்போதோ அணியிலிருந்து தூக்கியிருப்பார்கள். ரன் குவிக்கலாம் அல்லது அவுட் ஆகலாம்.
ஆனால், எந்த ஒரு முனைப்பும் இல்லாமல் கில் ஆடுகிறார். ரன் வரவில்லை என்றாலும் சரி.. 100 பந்துகளாவது எதிர்கொண்டு பவுலர்களை களைப்பாக்க வேண்டும். சக வீரர்களுக்குப் பக்கபலமாக நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.