21 வயதில் லட்சங்களில் சம்பளம்.. சத்தமே இல்லாமல் வேலை செய்யும் இந்திய கிரிக்கெட் வீரரின் மகள் - யார் தெரியுமா?
21 வயதில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் வீரரின் மகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரிக்கெட் வீரர்
1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி அறிமுகமானார்.இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களுடன் 7,000க்கும் மேற்பட்ட ரன்களும், 50 ஓவர் போட்டிகளில் 22 சதங்களுடன் 11,300 ரன்களும் கங்குலி எடுத்துள்ளார்.
இவர் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றபோது பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அணி வீரர்களை சரியான முறையில் வழிநடத்தினார். மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக ரசிகர்கள் வர காரணமாக இருந்தது சவ்ரவ் கங்குலி தான்.
மேலும் பிசிசிஐ தலைவராகப் பதவி வகித்த சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 2015ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு டோனா என்ற மனைவியும், 21 வயதில் சனா என்ற மகள் உள்ளார்.
லட்சங்களில் சம்பளம்
இவர் கொல்கத்தாவில் பள்ளிப் படிப்பை முடித்து, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் (யுசிஎல்) பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் PwC நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
இது மட்டுமின்றி HSBC, KPMG, Goldman Sachs, Barclays, ICICI போன்ற பெரிய நிறுவனங்களிலும் சவுரங் கங்குலியின் மகள் சனா பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் Deloitte இல் நிறுவனத்தில் சனா பணிபுரிந்து வருகிறார்.
அங்கு அவருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுவாக பெரிய பிரபலங்களில் வாரிசுகள் தந்தையின் தொழிலைப் பார்த்துக் கொண்டு சூழலில் சவுரவ் கங்குலி மகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.