சுபாஷ் சந்திர போஸ் 126வது பிறந்ததினம் - அவரது அசாதாரண பயணத்தின் நினைவலைகள் இதோ!
இந்தியர்கள் அகிம்சைவாதிகள், ஆயுதம் ஏந்த துணிவில்லாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு இளைஞன் சுதந்திரம் ஒன்றும் பிச்சை அல்ல கேட்டு பெறுவதற்கு அது என் பிறப்புரிமை ரத்தத்திற்கு ரத்தம் தான் பதில் என பொங்கி எழுந்து.
தேசத்தின் பொக்கிஷம்
இந்திய இளைஞர்களை ஆயுத போராட்டத்திற்கு திரட்டி “இந்திய ராணுவத்தை உருவாக்கிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் போஸ் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து சித்தரஞ்சன் தாஸின் வழிகாட்டுதலிலும், ஆதரவிலும் போஸின் பாய்ச்சல் அதிகரித்தது. அதனுடன் இந்திய தேசிய காங்கிரஸில் இளைஞரணி தலைவராக உயர்ந்தார்.

அதனுடன், வங்காள மாகாணத்தில் காங்கிரஸ் செயலாளராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து சித்தரஞ்சன் நிறுவிய ஃபார்வேர்ட் (forward) என்ற செய்திதாளுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் போஸின் தேசியவாத அணுகு முறை மற்றும் பங்களிப்பு ஆங்கிலேயர்களுக்கு ஒத்துவரவில்லை. எனவே 1925-ல் மாண்டலேயில் சிறையில் அடைக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர்
ஆனால் போஸ், அப்போது நடந்த வங்கதேச சட்டமன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1927ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போஸ், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பெற்றார். தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு கல்கத்தாவில் மேயராக போஸ்க்கு பதவி வழங்கப்பட்டது.

அப்போது, ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு, முசோலின் உள்ளிட்டோரை சந்தித்து சுதந்திரத்திற்காக உதவி கேட்டார். 1939ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட சீதாராமையாவை போஸ் தோற்கடித்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழுவில் இருந்தவர்களுக்கும் போஸ்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவரால் தலைவர் பதவியைத் தொடர முடியவில்லை.
இந்திய தேசிய இராணுவம்
ஜூன் 22, 1939 அன்று தலைவர் பதவியில் இருந்து விலகினார் போஸ். பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை துவங்கினார். இதற்கு ஆங்கிலேயர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டாம் உலக போரின் போது காங்கிரஸ் தலைமையை கலந்தாலோசிக்காமல் இந்தியாவின் சார்பாக வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ போர் அறிவித்தார்.

அவரது இந்த நடவடிக்கையால் 7 நாட்கள் சிறையிலும், 40 நாட்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார்.
ஆங்கிலேயருக்கு எதிராக பர்மா தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மணிப்பூர் இக்பால் நகரில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.