தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்!

India
By Sumathi 1 மாதம் முன்

இந்தியர்கள் அகிம்சைவாதிகள், ஆயுதம் ஏந்த துணிவில்லாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு இளைஞன் சுதந்திரம் ஒன்றும் பிச்சை அல்ல கேட்டு பெறுவதற்கு அது என் பிறப்புரிமை ரத்தத்திற்கு ரத்தம் தான் பதில் என பொங்கி எழுந்து இந்திய இளைஞர்களை ஆயுத போராட்டத்திற்கு திரட்டி “இந்திய ராணுவத்தை உருவாக்கிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்”

சுபாஷ் சந்திரபோஸ் - பிறப்பு

சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஒடிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவிக்கு மகனாக பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே ஒரு சிறந்த மாணவராக போஸ் திகழ்ந்தார். 1911ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் இணைந்தார். பேராசிரியர் ஓட்டன் என்பவரை இந்திய விரோத கருத்துகளுக்காக தாக்கியதாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

பின் போஸ், கல்கத்தா பல்கலைகழகத்தில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1918-ல் பி.ஏ தத்துவவியலில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார். தனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, சிவில் சர்வீஸ் துறையில் வேலைக்கு இணைந்தார்.

குடும்பம்

ஆனால், அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஏனெனில், ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை செய்வதாக அவர் எண்ணி பணியை ராஜினாமா செய்தார். ஃபார்வர்ட் பிளாக் உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி 1937ஆம் ஆண்டு ஆதிரிய கால்நடை மருத்துவரின் மகளான எமிலி ஷென்கல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நேதாஜி. தொடர்ந்து, அவருக்கு 1942ஆம் ஆண்டு அனிதா போஸ் என்ற பெண்குழந்தை பிறந்தது.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

பின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் போஸ் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து சித்தரஞ்சன் தாஸின் வழிகாட்டுதலிலும், ஆதரவிலும் போஸின் பாய்ச்சல் அதிகரித்தது. அதனுடன் இந்திய தேசிய காங்கிரஸில் இளைஞரணி தலைவராக உயர்ந்தார். அதனுடன், வங்காள மாகாணத்தில் காங்கிரஸ் செயலாளராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து சித்தரஞ்சன் நிறுவிய ஃபார்வேர்ட் (forward) என்ற செய்திதாளுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

சிறைவாசம்

இந்திய சுதந்திர போராட்டத்தில் போஸின் தேசியவாத அணுகு முறை மற்றும் பங்களிப்பு ஆங்கிலேயர்களுக்கு ஒத்துவரவில்லை. எனவே 1925-ல் மாண்டலேயில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் போஸ், அப்போது நடந்த வங்கதேச சட்டமன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்களது தடங்கல்கள் அத்தனையும் மீறி ஒருவரால் சிறையில் இருந்து வெற்றிபெற முடியும் என்றால், இவர் நமக்கு அச்சுறுத்தல் என்று பிரிட்டீஷ் அரசு நினைக்க துவங்கியது.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

1927ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போஸ், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பெற்றார். தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு கல்கத்தாவில் மேயராக போஸ்க்கு பதவி வழங்கப்பட்டது. அப்போது, ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு, முசோலின் உள்ளிட்டோரை சந்தித்து சுதந்திரத்திற்காக உதவி கேட்டார்.

காங்கிரஸ் தலைவர்

இவ்வாறு பல சம்பவங்கள் மூலம் போஸ் மிகவும் புகழ்பெற்ற தலைவரானார். அவரது புகழ் கண்டு வியந்த மற்ற தலைவர்கள் அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக நிமிக்க பரிந்துரைத்தனர். ஆனால், மகாத்மா காந்தி போஸை தலைவராக்க எதிர்ப்பு தெரிவித்தார். காரணம் போஸ் ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்வதால் அதை அவர், ஏற்கவில்லை. காங்கிரஸ்க்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டது.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

இந்திய தேசிய காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு போஸ் தனது சொந்த அமைச்சரவையை உருவாக்கினார். 1939ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட சீதாராமையாவை போஸ் தோற்கடித்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழுவில் இருந்தவர்களுக்கும் போஸ்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவரால் தலைவர் பதவியைத் தொடர முடியவில்லை. ஜூன் 22, 1939 அன்று தலைவர் பதவியில் இருந்து விலகினார் போஸ்.

வீட்டுக்காவல்

பின், பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை துவங்கினார். இதற்கு ஆங்கிலேயர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டாம் உலக போரின் போது காங்கிரஸ் தலைமையை கலந்தாலோசிக்காமல் இந்தியாவின் சார்பாக வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ போர் அறிவித்தார். அதை போஸ் வெகுஜனமக்களின் ஆதரவு திரட்டி எதிர்த்தார். அவரது இந்த நடிவடிக்கையால் 7 நாட்கள் சிறையிலும், 40 நாட்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார்.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

வீட்டுகாவலில் இருந்து 41வது நாள் மலாவியாக உடையணிந்து தப்பினார். அங்கிருந்து ஜெர்மனியை அடைந்தார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான், சோவியத் யூனியன், மாஸ்கோ மற்றும் ரோமுக்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, ஜெர்மனியின், உதவியுடன் ஆசாத் ஹிந்த் என்ற வானொலி ஒன்றின் மூலம் அந்நாட்டில் இருந்து வெள்ளையர்களுக்கு எதிராக முழங்கினார். அடுத்து, இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஜெர்மனி மற்றும் ஜப்பானின் உதவியை நாடினார்.

இந்திய தேசிய இராணுவம்

ஜெர்மனியின் தற்போதைய தலைநகரான பெர்லினில் இருந்து, ஆங்கிலேயருக்காக சண்டையிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3000 இந்திய கைதிகளை விடுவித்து, இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார். இரண்டாம் உலகபோரில் ஜெர்மனியின் வீழ்ச்சி மற்றும் போரில் பின்வாங்கியது இவை அனைத்தும், ஜெர்மன் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க உதவும் நிலையில் இல்லை என்று போஸ் உணர்ந்தார்.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

பின் பல இன்னல்களை சந்தித்த போஸ் 1943ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானை அடைந்தார். பின் அங்கிருந்து போஸ் சிங்கபூருக்கு சென்றார். அங்கு மன்மோகன் சிங்கால் நிறுவப்பட்ட “ராஷ் பிஹாரி போஸ்” -ன் முழு கட்டுப்பாட்டையும் போஸ்க்கு வழங்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ்க்கு ஐ.என்.ஏ அசாத்து ஹிந்து ஃபாஜ்-ல் (இந்திய தேசிய இராணுவம்) 'நேதாஜி' என்று அறியப்பட்டார்.

பெரும் ஆதரவு

இராணுவ துருப்புகளை ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் குடியேறியிருந்த இந்தியர்களின் பெரும் ஆதரவையும் பெற்றார். அதேபோல் இந்தியா தேசிய இராணுவத்தில் பெண்கள் அணியையும் உருவாக்கினார்.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

1944ஆம் ஆண்டு நேதாஜி மக்களிடையே ஒரு எழுச்சி உரையை நிகழ்த்தினார் அங்கு மக்களிடம் “உங்கள் இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன்” என்ற வசனங்கள் மூலம் மக்களை கவர்ந்தார்.

இறப்பு

பலரும் விடுதலை துடிப்புடன் நேதாஜியின் பக்கம் திரும்பினர். அசாத்து ஹிந்து ஃபாஜ்ல்க்கு நேதாஜி தலைமை தாங்கியதால், இந்தியாவை நோக்கி அந்த படை முன்னேறியது. அதில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் தவிர மற்ற இரண்டு தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷாஹீத் என்று பெயரிடப்பட்டு முகாமாக மாற்றப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக பர்மா தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மணிப்பூர் இக்பால் நகரில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

மற்ற நாடுகளின் அழுத்தத்தால், ஜெர்மனி மற்றும் ஜப்பான் இராணுவம், பர்மா மீது கடும் தாக்குதல் நடத்தியது எனவே நேதாஜிக்கு பின்வாங்கும் சூழல் ஏற்பட்டது. இது நேதாஜிக்கு கடும் வீழ்ச்சியாக அமைந்தது. அதன்பின் தனது படைக்கு உதவ கோரி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட நேதாஜி விபத்தில் மறைந்தார் என்று வரலாறு கூறுகிறது.

மர்மம்?

ஜப்பான் படை விமானமான மிட்சுபிஷி கி -21 விபத்திற்குள்ளானதாகவும், அதில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது உடல் ஜப்பான் டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோவிலில் புதைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் பொக்கிஷம்..சுபாஷ் சந்திர போஸின் சாகசங்களும், வியூகங்களும் ஓர் அலசல்! | Facts About Subhash Chandra Bose In Tamil

1992ம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘போஸ்துமஸ்’ முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் அவர் இறக்கவில்லை என்று ஏற்க மறுத்துவிட்டனர். போஸின் குடும்பவும் அந்த விருதை வாங்கவில்லை.