4 வயது சிறுமியை சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்.. புரட்டி எடுத்த மக்கள் - கொடூரம்!
காவல் அதிகாரி ஒருவர் சிறுமியை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர்
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூபேந்திர சிங். இவர் பணியில் இருந்தபோது, இந்த காவல் நிலையத்தில் அருகில் இருந்த வீட்டில் கான்ஸ்டபிள் ஒருவரின் மகளான 4 வயது சிறுமி அங்கு விளையாட சென்றுள்ளார்.
அப்பொழுது அந்த சிறுமியை அறைக்குள் அழைத்த அந்த அதிகாரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
மக்கள் போராட்டம்
இந்நிலையில், காவல் நிலையத்திற்கு முன் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை அடித்து தாக்கியுள்ளனர். மேலும், அங்கு பாதுகாப்புக்காக அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர், அந்த சப்-இன்ஸ்பெக்டர்ன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா சம்பவ இடத்திற்கு சென்று, "தலித் சிறுமியை சப்-இன்ஸ்பெக்டர் பலாத்காரம் செய்த சம்பவம் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.