தேசியக் கொடியை குப்பையில் போட முயன்ற காவல் அதிகாரி - அதிரடி காட்டிய ஆணையர்!
காவல் அதிகாரி ஒருவர் தேசிய கோடியை குப்பை தொட்டியில் போட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் போட்டி
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ரசிகர் ஒருவர் கையில் இந்திய தேசிய கொடியை எடுத்துவந்தார், அப்போது, அங்குப் பணியிலிருந்த எஸ்.ஐ ஒருவர், அவர்களிடமிருந்து தேசியக்கொடியைப் பறிமுதல் செய்தார்.
ஆணையர் அதிரடி
இந்நிலையில், அவர் அந்த தேசியக்கொடியை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட முயற்சி செய்தார். நிருபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் அருகில் அதைப் படமெடுத்துக் கொண்டிருந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட எஸ்.ஐ, குப்பைத் தொட்டியில் போடவிருந்த கொடியை உடனே வெளியே எடுத்து அருகிலிருந்த போலீஸ் ஜீப்பில் வைக்கச் சென்றுவிட்டார்.
இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் உட்படப் பலரும் எஸ்.ஐ-ன் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தேசியக் கொடியை குப்பைத் தொடியில் வீச முயன்ற உதவி ஆய்வாளரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.