உதயநிதி வருகை..தூய்மை பணியில் ஈடுபட்ட விடுதி மாணவர்கள் - அதிர்ச்சி காட்சிகள்!
உதயநிதி ஸ்டாலினின் வருகையை ஒட்டி தூய்மை பணியில் மாணவர்கள் ஈடுபட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.
உதயநிதி வருகை
சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதை ஓட்டி, அந்த மைதானத்தை சுத்தம் செய்யும் பணி மற்றும் கம்பு ஊன்றும் பணிகள் நடைபெற்றன.

அப்போது அந்த பணிகளை மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வரும் சில மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளனர் அங்கிருந்த அதிகாரிகள். மாவட்ட விளையாட்டு விடுதியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் வருகையையோட்டி அந்த மாணவர்களில் சுமார் 30 -க்கும் மேற்பட்டவர்களை ஒரே நாளில் விடுப்பு எடுக்க வைத்துள்ளனர். அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய அந்த மாணவர்களை மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வது,
விடுதி மாணவர்
கம்பி நடுவது போன்ற பல்வேறு பணிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மேற்கொள்ள சொல்லியிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியும் வேதனையும் அடையச் செய்துள்ளது.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பணியில் அமர்த்த கூடாது என அரசு பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில்,
அதை அதிகாரிகள் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களை இதுபோன்ற வேலை வாங்கும் சம்பவம் தொடர் கதையாகி வருவது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil