Tuesday, May 13, 2025

கல்லூரியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடம்; கோமியம் தெளித்து சுத்தம் செய்த மாணவர்கள் - பரபரப்பு!

Prakash Raj Karnataka
By Sumathi 2 years ago
Report

பிரகாஷ் ராஜ் சென்ற கல்லூரியில் கோமியம் வைத்து சுத்தம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரகாஷ் ராஜ் 

 கர்நாடகாவைச் சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தொடர்ந்து பிரதமர் மோடியின் செயல்பாட்டையும், பாஜக தலைவர்களையும் விமர்சனம் செய்து வருகிறார். மேலும், இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும், மேடை மற்றூ நிகழ்ச்சிகள் தாக்கி பேசி வருவார்.

கல்லூரியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடம்; கோமியம் தெளித்து சுத்தம் செய்த மாணவர்கள் - பரபரப்பு! | Students Purify Campus Cow Urine After Prakash Raj

இந்நிலையில், பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார்.

கடும் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கல்லூரிக்குள் நுழையாமல் தடுக்க இரும்பு தடுப்புகள் கல்லூரி வாசலில் வைக்கப்பட்டன.

கல்லூரியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடம்; கோமியம் தெளித்து சுத்தம் செய்த மாணவர்கள் - பரபரப்பு! | Students Purify Campus Cow Urine After Prakash Raj

ஆனால், பாதுகாப்பில் அவர் அங்குச் சென்று சிறப்புரையாற்றினர். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, மாணவர்கள் சிலர் அவர் சென்ற இடங்களில் கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.