முதல் ஆளாக ஓடி வந்து வாக்களித்த பிரகாஷ் ராஜ் - கர்நாடக தேர்தல்
இன்று கர்நாடகா தேர்தல் நடைபெற்று வருகிறது, இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் ஆளாக வந்து வாக்களித்து பேட்டி அளித்துள்ளார்.
தேர்தல்
கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது, இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.
இந்த தேர்தலில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள்.
இதில் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், பெங்களூரு மாநகரம் சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குக்ச்சாவடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வந்துள்ளார்.
#WATCH | Actor Prakash Raj arrives at polling booth in St. Joseph's School in Shanti Nagar, Bengaluru to cast his vote for #KarnatakaAssemblyElection pic.twitter.com/DsYgbc3ko3
— ANI (@ANI) May 10, 2023
இவர் காலையிலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்து விட்டு சென்றார், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காலை "வணக்கம் கர்நாடகா... நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக... மற்றும் 40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்.. உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.