இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை - 6 பேர் பலி!

Pakistan Bangladesh Death World
By Swetha Jul 17, 2024 06:11 AM GMT
Report

இடஒதுக்கீட்டை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

போராட்டம்

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளதேசம் கடந்த 1971-ல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிரை தியாகம் செய்தனர்.

இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை - 6 பேர் பலி! | Students Protest Against Quota System 6 Killed

எனவே சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மற்ற மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே உரிய தகுதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். எனவே நீதிமன்ற உத்தரவின்படி இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை நிறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

காவிரி பிரச்சனை.. தமிழக முதல்வர் உருவப்படத்தை வைத்து கீழ்த்தனமான செயலை செய்த கர்நாடக மக்கள்!

காவிரி பிரச்சனை.. தமிழக முதல்வர் உருவப்படத்தை வைத்து கீழ்த்தனமான செயலை செய்த கர்நாடக மக்கள்!

6 பேர் பலி

அப்போது வழங்கிய தீர்ப்புக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதேசமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை - 6 பேர் பலி! | Students Protest Against Quota System 6 Killed

அதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கற்களால் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி மாணவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.