காவிரி பிரச்சனை.. தமிழக முதல்வர் உருவப்படத்தை வைத்து கீழ்த்தனமான செயலை செய்த கர்நாடக மக்கள்!

M K Stalin Tamil nadu Karnataka
By Vinothini Sep 26, 2023 09:00 AM GMT
Report

கர்நாடக மக்கள் தமிழக முதலமைச்சர் உருவப்படத்தை வைத்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர்

தமிழகத்திற்கு 5,000 கன அடி நீரை காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பங்கை தரக்கூடாது என்று பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின.

karnataka-peope-protest-against-tn-cm-stalin

இதனைத் தொடர்ந்து கன்னட விவசாய அமைப்புகள், கன்னடர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன, மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர் ம்றியல், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. தடைகளை மீறி போராட்டம் நடத்தினால் அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

காவிரி நீர் திறப்பு.. எதிர்த்து எல்லையில் தீவிரமடைந்த போராட்டம் - தமிழர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

காவிரி நீர் திறப்பு.. எதிர்த்து எல்லையில் தீவிரமடைந்த போராட்டம் - தமிழர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

முதல்வரின் உருவப்படம்

இந்நிலையில், கன்னட அமைப்பினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை வைத்து, அதில் அவருக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து திதி கொடுகின்றனர். பின்னர் அவரது படத்தின் முன்பாக ஆண்களும் பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

karnataka-peope-protest-against-tn-cm-stalin

தமிழகத்திற்கு எதிரான போராட்டமாக இருக்கலாம், ஆனால் இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை இவ்வாறு செய்வது மிக மோசமான செயல். மேலும், இந்த கேவலமான செயலை தடுக்காமல் பெங்களூரில் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.