மேகதாது விவகாரம் தொடர்பாக எடியூரப்பாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்!

CM MK Stalin Karnataka Ediyurappa
By Thahir Jul 04, 2021 12:42 PM GMT
Report

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக முதல்வருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக எடியூரப்பாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்! | Mkstalin Cm Tamilnadu Ediyurappa

மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “மேகதாது அணை கட்டுவதன்மூலம், தமிழகம், கர்நாடகா என இரு மாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம். மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா கைவிட வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழ்நாட்டின் விவசாயிகள் இதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கர்நாடக அரசுடன் நல்ல உறவையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது. பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. கர்நாடகா - தமிழ்நாடு நல்லுறவை பாதுகாத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.