வகுப்பறையில் இப்படியா? மாணவர்கள் முத்தமிட்டு அத்துமீறல்..முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள்!
வகுப்பறையில் மாணவர் - மாணவி முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் வைரலாகியுள்ளது.
மாணவர்கள்
பள்ளிக்கூட வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவரும் மாணவியும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கிளாஸ் ரூமில் மாணவர்கள் அனைவரும் இருக்கும் போதே இரண்டு பேர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக்கொண்டு முகம் சுளிக்கும் வகையில் ஈடுபடுகிறார்கள். சக மாணவ மாணவிகள் அருகில் இருக்கிறார்கள் என்பதை சற்றும் கண்டு கொள்ளாமல் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கின்றனர்.
அத்துமீறல்
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ, பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களின் நடத்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும், இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு, மாணவ மாணவிகளின் எதிர்காலம் சீர்கெடாமல் இருக்க இத்தகைய சம்பங்களை உடனே கண்காணித்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.