தமிழ் பாடத் தேர்வில் மாணவர்கள் தோல்வி - டிஜிபி சைலேந்திர பாபு கவலை..!
அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் தமிழ் பாடத்தில் அதிக அளவில் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கவலை தெரிவித்துள்ளார்.
டிஜிபி கவலை
அண்மையில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
அதே நேரத்தில் தமிழ் பாடத்தில் ஃபெயில் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்திருந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் தமிழ் மீது கவனம் செலுத்துவது குறைந்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழில் அதிக அளவில் ஃபெயில் ஆனதற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கவலை தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் ஃபெயில் ஆனது பார்த்து கவலை அடைந்தேன். பல்வேறு நுழைவுத் தேர்வுகளை மனதில் வைத்து தமிழை விட மற்ற பாடங்களுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
கற்றலில் ஆர்வம் செலுத்தினால் தாய் மொழி தமிழில் மாணவர்கள் சாதிக்கலாம், எந்தவொரு பாடத்தையும் எளிதாக கற்கலாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்தி வைப்பு..!