பள்ளி மாணவர்களுக்கு இனி மாலை நேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புக்களுக்கான 2023 - 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மாலை நேர வகுப்புகள் 5 மணி அல்லது 5.30 மணி வரையோ நடைபெற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.