குறும்பட போட்டியில் வெற்றி! ஜப்பானுக்கு புறப்பட்ட குரும்பபட்டி அரசு பள்ளி மாணவி!

Tamil nadu Dindigul
By Jiyath Nov 03, 2023 05:47 AM GMT
Report

அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறார் குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவி கீர்த்தனா ஜப்பான் புறப்படுகிறார்.  

கல்வி சாரா போட்டிகள்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினா- விடை சார்ந்த போட்டிகள் பள்ளி, ஒன்றிய, மாவட்ட, மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.

குறும்பட போட்டியில் வெற்றி! ஜப்பானுக்கு புறப்பட்ட குரும்பபட்டி அரசு பள்ளி மாணவி! | Student Won Short Film Competition Went To Japan

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா என்ற மாணவி மாநில அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழுவிற்கு முதல் இடம் கிடைத்தது.

நடிகர் விஷாலின் வருகைக்காக காத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - ஏன் தெரியுமா?

நடிகர் விஷாலின் வருகைக்காக காத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - ஏன் தெரியுமா?

ஜப்பான் செல்லும் மாணவி

இந்த வெற்றியைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனா இன்று ஜப்பானுக்கு புறப்படுகிறார். இந்நிலையில் சென்னை சென்ற கீர்த்தனா தனது வெற்றி குறித்து கூறுகையில் "மாவட்ட அளவில் தேர்வான எனக்கு கடந்த ஆண்டு சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது.

குறும்பட போட்டியில் வெற்றி! ஜப்பானுக்கு புறப்பட்ட குரும்பபட்டி அரசு பள்ளி மாணவி! | Student Won Short Film Competition Went To Japan

அங்கு முன்னணி இயக்குநர்கள் பயிற்சி அளித்தனர். இதனையடுத்து 14 பேர் கொண்ட குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

12ம் வகுப்பிற்கு பிறகு அரசு திரைப்பட கல்லூரியில் இயக்குநர் பிரிவில் பட்டம் படித்து திரைத்துறை இயக்க நுட்பங்களில் புதுமையை புகுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளேன். தற்போது ஜப்பானுக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்று மாணவி கீர்த்தனா கூறியுள்ளார்.