6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - தமிழக அரசு உத்தரவு!
அரசு பள்ளிகளில் 6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலை அரங்கம் தொடங்க உத்தரவு.
கலை அரங்கம் பயிற்சி
தமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல திட்டங்களை செயல் படுத்த வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இது மாணவர்களின் படிப்பு தவிர பிற திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2022-2023 பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கடந்த கல்வியாண்டில் "கலை அரங்கம் பயிற்சி" வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டும் கலை திருவிழா நடத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பயிற்சி
இதில் அனைத்து அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் நடனம், நாட்டுப்புறக் கலை, இசை, காட்சிக் கலை, நாடகம், பொம்மலாட்டம் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்கள் கைப்பேசி வாயிலாக சேகரிக்கப்படும்.
பகுதி நேர, முழு நேர வாய்ப்பாட்டு ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் அலை அரங்கம் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காட்சி கலைகள், வரைதல், காணொலி படப்பிடிப்பு,ஓவியம், சிற்பக்கலை,காணொலி தொகுப்பாக்கம்,காகித வேலை, புகைப்படம் போன்ற கலைகளுக்கான பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5,038 அரசுப் பள்ளிகளில் கலை அரங்கம் பயிற்சி வழங்கப்படும்.
வரும் 17ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒருமுறை பாட வேளை அட்டவணையின் படி, கல்வி சாரா செயல்பாடுகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட Art & Culture என இரண்டு பாட வேளைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.