படிக்காமல் மாணவிகளுடன் நெருக்கமாக இருந்த மாணவன், கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து - அதிர்ச்சி!
மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்பதியுள்ளது.
மாணவர் செய்த காரியம்
மும்பைக்கு அருகில் உள்ள மீரா ரோட்டில், கோச்சிங் கிளாஸ் நடத்தி வருபவர் ராஜு தாக்குர். இவர் காஷ்மிரா என்ற இடத்தில் உள்ள குஜராத்தி சாலில் தனது நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த 17 வயது சிறுவர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், பின்னர் அவரை தாக்க ஆரம்பித்தார்.
இதனை ராஜு மற்றும் அவரது நண்பர்கள் தடுக்க முயன்றனர், ஆனால் அந்த சிறுவர் ராஜுவை கீழே தள்ளிவிட்டு கத்தயால் குத்திவிட்டு தப்பியோடினார். அவரை மருத்துவமனையில் சென்று சேர்த்தனர்.
கண்டித்த ஆசிரியர்
இந்நிலையில், அந்த சிறுவர் கத்தியுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதனை தொடர்ந்து, போலீசார் ராஜுவிடம் விசாரணை நடத்தினர், அப்பொழுது இவரது கோச்சிங் கிளாசில் பயின்று வரும் மாணவர் தான் அவர் என்று தெரியவந்தது.
இவர் வகுப்பில் சரியாக படிக்காமல்ன், கிளாஸிற்கு வரும் மாணவிகள் சிலருடன் மாணவர் மிகவும் நெருக்கமாக பேசியிருக்கிறார். அதனால் இவரது ஆசிரியரான ராஜு கண்டித்துள்ளார், பின்னர் வகுப்பில் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், போலீசார் அந்த மாணவருடன் கத்தியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.