அடங்காத பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ் - படம் எடுத்து ஆடிய நாகம்… மாணவிகள் அலறல்
கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்றை தனது முகத்துக்கு எதிராக வைத்துக் கொண்டு சொற்பொழிவு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3000 ஆயிரம் பாம்புகளிடம் கடி வாங்கிய வாவா சுரேஷ்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். சிறு வயது முதலே பாம்புகளிடம் அதிக நெருக்கம் கொண்டவராக இருந்து வந்த அவர், பள்ளி படிப்பு முடிந்த பின் பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
தன்னை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கேயாவது யார் வீட்டிலாவது பாம்பு புகுந்துவிட்டால் அதை பிடித்து வனப்பகுதியில் அவர் கொண்டு சென்று விட்டு வந்தார்.
பின்னர் பாம்பு வந்தாலே வாவா சுரேஷை கூப்பிடுங்கள் என்ற அளவுக்கு வளர்ந்தார். தனது வாழ்நாளில் 30 ஆயிரம் பாம்புகளை எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் பிடித்துள்ள வாவா சுரேஷை 3000 ஆயிரம் பாம்புகள் இதுவரை கடித்துள்ளது.
இதில் 800 பாம்புகள் கொடிய விஷத்தன்மை கொண்டவை. பாம்பு கடித்ததால் பல முறை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
உயிர் பிழைத்த வாவா சுரேஷ்
கடந்த பிப்ரவரி மாதம் கோட்டயத்தில் ஒரு வீட்டில் கருநாகம் ஒன்று புகுந்துள்ளது. இதையடுத்து வீட்டினர் வாவா சுரேஷிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வாவா சுரேஷ் கருநாகத்தை பிடித்து சாக்கு பையில் போடும் போது அவரது தொடையில் கடித்தது.
அப்போது விஷம் ஏறியதால் மயக்கமடைந்த வாவா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றனர்.
இது பற்ற தகவல் அறிந்த கேரள மக்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் மெடிக்கல் மிராக்கல்லாக உயிருடன் மீண்டு வந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வாவா சுரேஷ் பாம்தை தக்க உபகரணங்களுடன் தான் இனி கையாள்வேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் தனது பேச்சை பொய்யாக மாற்றி எல்லை மீறியுள்ளார்.
மாணவிகள் அலறல்
கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் நர்சிங் மாணவிகளுக்கு பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாவா சுரேஷ் எடுத்துரைத்துள்ளார்.
அப்போது பேசிக் கொண்டிருந்த போது தீடீரென தான் கொண்டு வந்த பையில் இருந்து 5 அடி நீளமுள்ள பாம்பை எடுத்து தனக்கு முன்னாள் இருந்த மேஜையின் மீது வைத்தார்.
தனது முகத்தின் முன் 3 இன்ஞ் துாரத்தில் இருந்த நல்ல பாம்பு அவரை பார்த்து படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த அங்கிருந்த மாணவிகள் அலறியுள்ளனர்.
பின்னர் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை முடித்து கொண்டனர்.