பிளஸ் -1 மாணவன் செய்த கொடூரம்; திருமணமான பெண் குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்!
திருமணமான பெண் குளித்ததை வீடியோ எடுத்து 11 -வகுப்பு மாணவன் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறிச்செயல்
கள்ளகுறிச்சி, திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தனது வீட்டில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் அந்த பெண் சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் மறைந்திருந்து, அவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர், அதை இளம்பெண்ணிடம் காட்டி தனது ஆசை மற்றும் தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்க வேண்டும்.
மாணவன் மிரட்டல்
அதற்கு மறுத்தால், இந்த வீடியோவை வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுவேன். மேலும், இதை பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன், என்று மிரட்டியுள்ளார்.
இச்சம்பவத்தை குறித்து அந்த பெண் அவரது கணவர் மற்றும் உறவினரிடம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவனை கண்டித்துள்ளனர். இருப்பினும், அந்த மாணவன் இளம்பெண் குறித்து அவதூறாக கடிதம் எழுதி இதையும் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து, அப்பெண் புகைரளித்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனை தேடி வந்தனர். இதை அறிந்த அம்மாணவனின் தந்தை கோவிந்தன் (வயது 36) என்பவர் ஆத்திரத்தில் மாணவன் எழுதிய அந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
மேலும், இதை அறிந்த போலீசார் கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாணவனையும் தேடி வருகின்றனர்.