பெண் மருத்துவரை மிரட்டிய நோயாளி - தொடர்ந்து பெண் டாக்டர்களுக்கு நடக்கும் கொடுமை!

Kerala Crime
By Vinothini Jun 19, 2023 06:50 AM GMT
Report

கேரளாவில் தொடர்ந்து பெண் டாக்டர்களுக்கு நோயாளிகள் மிரட்டல் விடுத்தது வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நோயாளி மிரட்டல்

கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது குறித்து அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார்.

patient-threatened-women-doctor-in-kerala

அதில் அவர் கூறுகையில், "நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர்.

அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்" என்றும் கூறினார்.

புகார்

இந்நிலையில், அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்பொழுது போலீசார் அந்த நபரை மீண்டும் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இதுபோல பெண் டாக்டர் வந்தனா தாஸ் விவகாரத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

patient-threatened-women-doctor-in-kerala

மேலும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது.

இப்போது கோட்டயம் அரசு மருத்துவமனையில் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.