பொதுத்தேர்வில் 494 மதிப்பெண்கள் ஆனாலும் தற்கொலை செய்த மாணவர்!!
கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் +2 வகுப்பின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
பொதுத்தேர்வு முடிவுகள்
+2 வகுப்பு மாணவர்களும், பெற்றோர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த +2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
எப்போதும் போல் இந்த வருடமும் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். மொத்தமாக 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தற்கொலை
தமிழ் பாடத்தில் 35 பேரும், ஆங்கிலத்தில் ஏழு பேரும் இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும் , நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த நிலையில், கம்பத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் பொதுத்தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
600'க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவோம் என எதிர்பார்த்து காத்திருந்த ஜெயவர்மன் (17) என்கிற அம்மாணவன் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது, மூன்றாவது மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.