அதிகாரம் நம்மிடம் இருக்கணும்!! விக்கிரவாண்டியில் போட்டியிடும் ஸ்ரீமதியின் தாய்
நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடைசி நாள் வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
விக்கிரவாண்டி தேர்தல்
விக்ரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்ரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுகவில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பராக் வேட்பாளராக அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் அபிநயா போன்றோர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்கள்.
அதிகாரம்....
தேர்தலில் ஜனநாயகம் இருக்காது என்ற காரணத்தால், போட்டியில்லை என அதிமுக அறிவித்துள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற காரணத்தால் பல சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.
அவர்களில், பெறும் சலசலப்புகளை ஏற்படுத்திய மாணவி ஸ்ரீமதியின் தாயார் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனது மகளை இழந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. என் மகளுக்கு ஏற்பட்டது,
வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.
பாமர மக்களுக்கு நீதி கிடைப்பது இந்த சமூகத்தில் மிகவும் கடினமாக உள்ளது. அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்." என்றார்.