வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் செய்த மோசமான செயல் - viral video!

United States of America School Incident
By Swetha Apr 18, 2024 10:35 AM GMT
Report

பள்ளி வகுப்பறையில் உள்ள ஆசிரியையின் கன்னத்தில் மாணவர் ஓங்கி அறையும் வீடியோ பரவி வைரலாகி வருகிறது.

மாணவன் செயல் 

ஒவ்வொரு மனிதனும் அவர்களது வாழ்க்கையில் வளர்ந்த பின்னர் ஒரு நல்ல இடத்தில் இருப்பதற்கு தாய் தந்தைக்கு அடுத்ததாக ஆசிரியர்கள் அளவு கடந்த உழைப்பை தருகின்றனர். சிறு பிள்ளையாக பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வி தான் அவனுடைய வாழ்க்கையை வழி நடத்த உதவுகிறது.

வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் செய்த மோசமான செயல் - viral video! | Student Slapping Teacher On Cheek Video Goes Viral

அதனைக் கற்றுக் கொடுக்கும் குரு, கடவுளை விட மேலானவர் ஆவார்கள். ஆனால், கல்வி கற்றுத்தரும் குருவை மற்ற மாணவர்கள் மத்தியில் தரக்குறைவாக நடத்துவதை பார்த்து மகிழும் சில மாணவர்களும் இருக்க தான் செய்கின்றனர். அப்படி ஒரு மாணவனின் வீடியோ உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மாகாணத்தின் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓர் வகுப்பில் நாற்காலியில் ஆசிரியர் அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென மாணவர் ஒருவர் அவரை நோக்கி வந்து ஆசிரியையின் கன்னத்தில் அறைகிறார்.

கொடூரத்தின் உச்சம்; இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை கொண்டு அடிக்க வைத்த ஆசிரியை - வீடியோ வைரல்!

கொடூரத்தின் உச்சம்; இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை கொண்டு அடிக்க வைத்த ஆசிரியை - வீடியோ வைரல்!

என்ன நடக்குது?

ஆனால் ஆசிரியர் அதற்கு எதுவும் எதுவும் நடக்காதது போல் அமர்ந்து இருந்தார். இதனால் கோபமுற்ற அந்த மாணவர் மீண்டும் ஆசிரியரது கன்னத்தில் ஓங்கி அரைக்கிறார். இதில் கண்ணாடி பறந்தது கீழே விழுகிறது. இதனை பார்த்து மாணவர்கள் அனைவரும் சிரிக்கின்றனர். தாக்கிய மாணவன் விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்க்கின்றார்.

வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் செய்த மோசமான செயல் - viral video! | Student Slapping Teacher On Cheek Video Goes Viral

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பரவி வருகிறது. பள்ளிகளில் கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு ஒழுக்கமும் கற்றுத்தருக்கின்றனர். அப்படி வளரும் மாணவர்களால் அவர்களது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பயன்தருவதாக இருப்பார்கள்.

ஆனால் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடும் மாணவனின் நடவடிக்கையால் ஒட்டு மொத்த மாணவ உலகத்திற்கும் கெட்டப்பெயரை உருவாக்குகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவன் மீது தாக்குதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாணவனின் கீழ்த்தரமான நடத்தைக்கு வடக்கு கரோலினா ஷெரிப் பாபி எஃப். கிம்ப்ரோ கிம்ப்ரோ ஜூனியர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து பள்ளியின் முதல்வர் பேசுகையில், வைரலான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பள்ளியில் ஒழுக்கம் குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.