ஊக்க மருந்து சாப்பிட்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை - மாணவி பலி!
பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்திரபிரதேசம், உன்னாவ் நகரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜ்கவுதம் என்ற இளைஞர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்துள்ளார்.
பாலியல் ஊக்க மாத்திரை உண்ட அவர் அந்த பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும் அவரை அப்படியே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். வெளியில் சென்ற அந்த மாணவியின் சகோதரி வீட்டிற்கு வந்து பார்க்கும் போது
மாணவி பலி
அவர் பிறப்புறுப்பில் ரத்தபோக்குடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவியியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன்பின் தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீஸார் தலைமறைவாக இருந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.