பள்ளி கழிவறை.. மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்!
மாணவியை பள்ளி கழிவறையில், மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவி
டெல்லியைச் சேர்ந்தவர் 11 வயது மாணவி. இவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். அந்த மாணவி வகுப்பறைக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக 2 சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியுள்ளார்.
அதையடுத்து, அவர் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் அந்த 2 சீனியர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அந்த 2 மாணவர்களும் கோபத்தில் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அந்த மாணவியை பள்ளிக்கூட கழிவறைக்கு இழுத்து சென்று, உள்பக்கமாக பூட்டி அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
அதனையடுத்து, இதுகுறித்து பள்ளி ஆசிரியரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாக நிர்வாகம் சம்பவத்தை மறைத்துள்ளது. எனவே, மாணவி போலீஸில் புகாரளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது.
பள்ளிக்கூடத்தில் மாணவி சீனியர் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.