Sunday, Jul 20, 2025

மாணவி சத்யாஸ்ரீ கொலை வழக்கு : முக்கிய ஆதாரத்தை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார்

Chennai Tamil Nadu Police
By Thahir 3 years ago
Report

மாணவி சத்யாஸ்ரீ ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய ஆதாரம் சிக்கியது 

கடந்த 13 ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லுாரி செல்வதற்காக காத்திருந்த மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்தார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கை டிஜிபி சைலேந்திர பாபு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டார்.

மாணவி சத்யாஸ்ரீ கொலை வழக்கு : முக்கிய ஆதாரத்தை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார் | Student Sathya Murder Case Cbcid Seized Evidence

சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சதீஷை 3 நாள் காவலில் எடுக்க மனு அளித்துள்ளனர்.

மேலும் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளனர். மேலும் 4 நாட்களாக தீவிரமாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் 4 காட்சிகளை கைப்பற்றியுள்ளதாகவும்,

அதில் முதல் காட்சியில் சத்யா ரயில் நிலையத்திற்கு வருவதும், இரண்டாவது காட்சியில் சதீஷ் வருவதும், 3வது காட்சியில் சத்யாவிடம் சதீஷ் பேசுவதும்,

4வது காட்சியில் ரயில் முன் சத்யாவை தள்ளிவிடுவதும் போன்ற காட்சிகள் சேமிக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளனர்.