மாணவி மர்ம மரணம்...வெடிக்கும் கலவரம்! போலீசார் துப்பாக்கிச்சூடு

Tamil nadu Attempted Murder Crime
By Sumathi Jul 17, 2022 05:58 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்டத்தில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மாணவி தற்கொலை

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மர்ம மரணம்...வெடிக்கும் கலவரம்! போலீசார் துப்பாக்கிச்சூடு | Student Protest Police Gun Shot In Kallakurichi

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 பிரேத பரிசோதனை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி மர்ம மரணம்...வெடிக்கும் கலவரம்! போலீசார் துப்பாக்கிச்சூடு | Student Protest Police Gun Shot In Kallakurichi

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல் 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மாணவி மர்ம மரணம்...வெடிக்கும் கலவரம்! போலீசார் துப்பாக்கிச்சூடு | Student Protest Police Gun Shot In Kallakurichi

அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகின்றது.

இதனால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.