விஜய் கொடுத்த வைர நெக்லஸ்.. அதை நான் - நந்தினி முடிவால் ரசிகர்கள் ஆச்சர்யம்!
முழு மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் அளித்தார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் விருது நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கினார்.
அதில், , 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸை விஜய் வழங்கினார். தொடர்ந்து இதுகுறித்து பேசியுள்ள நந்தினி, ‘விஜய்யை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,
வைர நெக்லஸ்
அவர் நெக்லஸ் கொடுத்த நிமிடத்தை மறக்கவே மாட்டேன். நான் இதுவரைக்கும் தங்கத்துல கூட நெக்லஸ் போட்டது இல்லை. அதுக்கான வசதியும் இல்லை. . விஜய் நடித்ததில் மெர்சல் படம் எனக்கு பிடிக்கும். நிஜத்திலும் அவர் ஹீரோ தான்.
மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்துவதில் பல கோடி செலவு பண்ணி இந்த நிகழ்ச்சி நடத்திருக்காரு. இந்த வைர நெக்லஸை கடைசி வரை பொக்கிஷமா பாதுகாத்து வைத்திருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.