600/600 எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் அளித்த நடிகர் விஜய்!
முழு மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் அளித்துள்ளார்.
விருது வழங்கும் விழா
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் விருது நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. விழாவின் வரவேற்புரையை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கி வருகிறார். 1700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். உங்கள் குணத்தை நீங்கள் இழந்துவிட்டால் நீங்கள் அனைத்தும் இழந்து விடுவீர்கள் என அறிவுரை வழங்கினார்.
வைர நெக்லஸ்
நம் விரலை வைத்து நமது கண்ணை குத்தும் செயல் தான் தேர்தல், நாளைய வாக்காளர்களான நீங்கள் சரியான தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் அம்பேத்கரைப் படிக்க வேண்டும், பெரியாரைப் படிக்க வேண்டும், காமராஜரைப் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸை விஜய் வழங்கினார்.