நாங்குநேரியில் அரங்கேறிய கொடூரம் - சக மாணவனை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவன்!
சக மாணவனை 9ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9ம் வகுப்பு மாணவன்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே விஜயநாராயணம் கடற்படை தளத்தில் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்தியாலயா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, மூலக்கரைபட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னுடைய பாட்டில் தண்ணீரை உடன் படிக்கும் நாங்குநேரியை சேர்ந்த மாணவன் மீது ஊற்றியதாகவும் இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணவர்கள் இருவரும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அறிவாள் வெட்டு
இந்த நிலையில் மோதலின்போது, சக மாணவன் ஒருவன் அரிவாளை வைத்து, மோதலில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை வெட்டியுள்ளார்.இதில் காயமடைந்த மாணவன் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்பகை காரணமாக சக மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து அரிவாளைக் கொண்டு வந்து, தன்னுடன் பயிலும் மாணவனை வகுப்பறையில் வெட்டியதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே நாங்குநேரியை சேர்ந்த மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.