கல்விக்கு உதவி கேட்ட மாணவி : காஜல் அகர்வால் செய்த நெகிழ்ச்சி செயல்

education actress help student Kajal Aggarwal
By Jon Apr 08, 2021 04:55 PM GMT
Report

தனது கல்விக்காக மாணவி ஒருவர் காஜல் அகர்வாலின் ட்விட்டர் பக்கத்தில் உதவி கேட்டிருந்தார் அதற்காக காஜல் அகர்வால் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ட்விட்டரில் கல்விக்காக உதவிக்கோரிய கல்லூரி மாணவிக்கு உடனே உதவிக்கரம் நீட்டிய காஜல் அகர்வாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், தற்போது தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனது கல்லூரி தேர்வு கட்டணத்தை செலுத்த 83 ஆயிரம் ரூபாய் தேவை என ட்விட்டர் வாயிலாக காஜல் அகர்வாலிடம் உதவி கேட்டிருந்தார்.

உடனடியாக தனது உதவியாளர் மூலம் சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்பு கொண்ட காஜல் அகர்வால், அவரது வங்கிக்கணக்கு விவரங்களை கேட்டறிந்து ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினார். காஜல் அகர்வாலின் இந்த செயல் மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


Gallery