ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலை - அடுத்தடுத்து அதிர்ச்சி

Chennai Death
By Sumathi Feb 14, 2023 12:47 PM GMT
Report

ஐஐடி நிறுவனத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட், சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்தார். அவர் தனது அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்தது குறித்து சக மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலை - அடுத்தடுத்து அதிர்ச்சி | Student Hangs Himself At Iit Chennai

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் தற்கொலை

எனினும் தற்கொலைக்கான முழுமையாக காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் மற்றொரு மாணவர் சரியாக படிக்க முடியாத காரணத்தால் மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.