சிறுநீர் கழிக்க அனுமதிக்கல - மாணவனை கொடுமைப்படுத்திய ஆசிரியர்!
சிறுநீர் கழிக்க அனுமதிக்காத ஆசிரியர் மீது மாணவன் புகாரளித்துள்ளார்.
ஆசிரியர் கொடுமை
தூத்துக்குடி, சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரின் மகன் தர்மசுதன், அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் தர்மசுதன் பள்ளிக்கு சென்றுருக்கிறார்.
அங்கு மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் தர்மசுதனை ஆசிரியர் கண்டித்ததோடு வகுப்பறைக்குள் அமர வைத்துள்ளார். அதற்கிடையில் இடைவேளையின் போது மாணவ, மாணவிகள் அனைவரும் வெளியில் சென்ற நிலையில் இந்த மாணவனை மட்டும் அனுமதிக்கவில்லை.
மாணவன் புகார்
தொடர்ந்து, வீட்டிற்கு வந்த மாணவன் சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான். விசாரித்ததில், `தன்னை இடைவேளையின் போது ஆசிரியர் சிறுநீர் கழிக்க அனுமதிக்கவில்லை' எனக் கூறி அழுதுள்ளான்.
அதனையடுத்து பள்ளி சென்று முறையிட்டதில் அங்கு சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் பெற்றோர் போலீஸாரிடன் சென்று புகாரளித்து மனு கொடுத்துள்ளனர். அது தொடர்பாக ஆசிரியரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.