நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்போது இந்த ஆபத்து உங்களுக்குத்தான்!
இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான்.
சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான். சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள்.
இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள். வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது.
சிறுநீரை அதிகமாக அடக்கும் போது, பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும்.
மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகத்தில் பிரச்சினை
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.
மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் திறனை சிறுநீர் பையின் தசைகள் விரைவில் இழந்துவிடுகின்றன.
இதனால் பின்னாளில் அவசரத்திற்கு கூட 2 நிமிடம் அடக்க முடியாமல் கட்டுப்பாட்டை சிறுநீரில் உள்ள யூரியா தாது வெளியேற காலம் தாழ்த்தினால், சிறுநீரகத்தில் மணல் போல் அவை படிந்துவிடும். இவை காலபோக்கில் யூரிக் கற்களாக மாறிவிடுகின்றன.
பின் சிறுநீர் செல்லும் வழித்தடத்தை அது அடைத்துக்கொள்கிறது. வலியும் வேதனையும்தான் மிச்சம். சிறுநீர்ப் பை நிறைந்திருந்தால் ரத்தம், உட்கொள்ளும் நீர் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் பணிகள் முடங்கிவிடும். அந்தச் சுத்திகரிப்பு செயல் முறையே திணறிவிடும்.
தசைகள்
சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடையும், அதனால் உடல் எடையை இழக்க நேரிடும். அதிக வலி நீண்ட நேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும், அதன் பின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
தலைவலி
சிறுநீரை அடக்கி வைத்தால் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, கவனச்சிதறல் மேலும் ஒற்றைத் தலைவலி வரை ஏற்படும்.
குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். சிறுநீர் கழிக்க தோணும் போதே சென்று கழித்துவிடுங்கள். வேலை நேரங்களில் கூட முடிந்த வரை சிறுநீரை அடக்கிக்கொண்டு உட்காராதீர்கள். தண்ணீர் குடிக்காமல் பேலன்ஸ் செய்யவும் முயற்ச்சிக்காதீர்கள். ஏனெனில் சீரான உடல் ஆரோக்கியத்திற்காக, நீர் நாள் முழுவதும் உடலுக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.