NON VEG பிரியாணி எடுத்து வந்த மாணவன் - பள்ளியில் இருந்து நீக்கிய நிர்வாகம்!
அசைவ பிரியாணி எடுத்து வந்த மாணவனை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.
அசைவ பிரியாணி
உத்தரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் ஹில்டன் என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் 3ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவர் பள்ளிக்கு மதிய உணவாக அசைவ பிரியாணி எடுத்து வந்திருந்துள்ளார்.
உடனே அந்த சிறுவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்த நிலையில், அந்த மாணவன் பள்ளிக்கு மீண்டும் வர அனுமதி மறுக்கப்பட்டது.
மாணவன் நீக்கம்
இதனால் சிறுவனை வேறு பள்ளிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாணவர் மற்றும் அவரின் இரு சகோதரர்கள் என மூவருக்கும் மாற்றுச்சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
A school principal Avneesh Sharma is openly accusing a little boy based on his own hatred towards the Muslim community. He is accusing a 7 yr-old Muslim boy of breaking temples and converting Hindus.
— Mohammed Zubair (@zoo_bear) September 5, 2024
C'C: @dmamroha @amrohapolice pic.twitter.com/Fqxi7hXDMr
அதோடு மாணவரின் நிலுவை கல்விக் கட்டணமான 37 ஆயிரம் ரூபாயையும் செலுத்தத் தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.