நீட் தேர்வால் மன அழுத்தம்.. பள்ளி மாணவி செய்த காரியம் - அதிர்ச்சி!
மாணவி ஒருவர் நீட் தேர்வினால் மனமுடைந்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம், எரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பைரவி, இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் பங்குபெற்று 250 மதிப்பெண் பெற்றார்.
இவர் அதிக மதிப்பெண் வாங்கமுடியாததால் மனமுடைந்து இருந்துள்ளார். இதனால் சோகத்தில் இவர் பூச்சி மருந்தை அருந்தியுள்ளார், பிறகு இது குறித்து பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.
விபரீதம்
இந்நிலையில், இந்த மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் விஷம் அருந்தியதை தனது பெற்றோரிடம் சொல்லாமலே இருந்ததால், சாதாரண வயிற்று வலி என்று விட்டனர். நேற்றுமுன்தினம் கடுமனையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், உடல்நலம் சரியில்லாமல் போனதால் நேற்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.