மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆபாச வீடியோ..பதிவேற்றிய கல்லூரி மாணவர் கைது!
சுரேஷ் கோபி வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றிய மாணவர் கைது செய்யப்பட்டார்.
ஆபாச வீடியோ..
மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவரது பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து திருச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் ஹரி, பீச்சி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடந்தது. அந்தப்படி, காட்டூர் அருகே கீழுப்பள்ளிக்கரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷியாம்(23)
மாணவர் கைது
என்ற இளைஞர் மத்திய அமைச்சர் பெயரில் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. அண்மையில், சுரேஷ் கோபி பீச்சி பகுதிக்கு வந்த போது அவரும்,
ஹரியும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது விசாரணையில் அம்பலமானது.இதன்பிறகு அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.