ஆழ்துளை கிணற்றில் சிறுவன்..80மணி நேரத்திற்கும் மேலான மீட்பு போராட்டம்-திடுக்கிடும் நொடிகள்!

India Borewell
By Sumathi Jun 14, 2022 06:24 AM GMT
Report

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை மீட்கும் பணி 80 மணி நேரத்தையும் தாண்டி நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணறு

ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

ஆழ்துளை கிணற்றில் சிறுவன்..80மணி நேரத்திற்கும் மேலான மீட்பு போராட்டம்-திடுக்கிடும் நொடிகள்! | Struggle To Rescue The Boy Fell Into The Deep Well

இதையடுத்து மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பல குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

சுயநினைவுடன் சிறுவன்

ராகுலின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, மீட்பு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் ஜித்தேன்த்ரா சுக்லா தெரிவித்துள்ளார். சிறுவன் சுயநினைவுடன் உள்ளதாக கூறப்படும் நிலையில், குழாய் வழியாக ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் சிறுவன்..80மணி நேரத்திற்கும் மேலான மீட்பு போராட்டம்-திடுக்கிடும் நொடிகள்! | Struggle To Rescue The Boy Fell Into The Deep Well

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஒட்டுமொத்த மாநிலமும் ராகுல் சாகுவிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

கோயில் குடமுழுக்கு..ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்-மக்கள் ஆச்சர்யம்!