கோயில் குடமுழுக்கு காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர் - வியந்து பார்த்த மக்கள்!
கோயில் குடமுழுக்கை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினரை அக்கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கோயிலில் குடமுழுக்கு விழா
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்ட நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர், தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார். சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் வசிக்கும் இக்குடும்பத்தினர், இரும்புக் கடை மற்றும் ஜவுளி கடை நடத்தி வருகின்றன.
நீண்ட நாள் ஆசை
கோயில் திருவிழாவுக்கு செல்வதன் மூலம் தங்கள் ஹெலிகாப்டர் பயண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தனர். பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து, கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தீத்தாம்பட்டிக்கு சென்றனர்.
கிராமத்தின் மீது ஹெலிகாப்டர் வட்டமடித்து தரையிறங்கியதை மக்கள் ஆர்வமுடன் வேடிக்கைப் பார்த்தனர். சிலர், ஹெலிகாப்டர் முன் நின்றுக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த பயணம் தங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். \
பாட்டி வயசுல இது தேவையா..நயன் திருமணம் குறித்த மருத்துவர் பதிவு-வலுக்கும் கண்டனங்கள்!