அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம் - கட்சி பொறுப்புகள் பறிப்பு!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami K. A. Sengottaiyan
By Sumathi Sep 30, 2025 06:31 AM GMT
Report

40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.

ஆதரவாளர்கள் நீக்கம் 

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

edappadi palanisamy - sengottaiyan

மேலும், இது தொடர்பான நடவடிக்கையை 10 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

திமுகவில் இணைந்து சில நாட்கள்தான் - மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு!

திமுகவில் இணைந்து சில நாட்கள்தான் - மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு!

இபிஎஸ் அதிரடி

அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில் செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம் - கட்சி பொறுப்புகள் பறிப்பு! | Stripping Sengottaiyan Supporters Admk Eps Action

இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளைய நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.