இனி நடிகர் - நடிகைகளுடன் Selfie எடுத்து கொண்டால் Action தான் - சென்னை கமிஷனர் எச்சரிக்கை
காவல் துரையின் மீது பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது.
Selfie
உத்தரவு பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களை காணும் போது, புகைப்படம் அதாவது selfie எடுத்து கொள்வது என்பது மக்களின் வாடிக்கையாகி விட்டது. பிரபலங்கள் வரும் இடங்களை தெரிந்து கொள்பவர்கள் அவர்களுக்கு முன்பாகவே அங்கு சென்று புகைப்படம் எடுக்க கூட்டம் கூட்டமாக தயாராகி விடுகிறார்கள்.
இது சமீபத்திய எடுத்துக்காட்டு, நடிகர் விஜய் வாக்களிக்க வந்த போது, திரண்ட கூட்டம். பெரிய கட்டுக்கடங்காத கூட்டம், கூடியது. கூட்டத்தை சமாளிக்க போலீஸ் காரர்களும் திணறினார்கள்.
எச்சரிக்கை
இந்த சூழலில், சிலர் போலீசாரும் பிரபலங்கள் வரும் போது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தயங்குவதில்லை. ஆனால், இது பல சமயங்களில் விமர்சனத்திற்குள்ளான ஒன்றாக இருக்கின்றது.
காரணம், பல அது காவல் துறைக்கு என்று இருக்கு கவுரவத்திற்கு இழுக்கான ஒன்று என பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்த சூழலில் தான், சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, பிரபலங்கள் வரும் நேரத்தில், பணியின் போது அவர்களுடன் selfie எடுத்துக்கொண்டால், அவர்கள் மீது துறை ரீதியிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க்கப்பட்டுள்ளது.