வாய்பேசமுடியாத சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - பரிதாபமாக உயிரிழந்த சோகம்!
கேரளாவில் மாற்றுத்திறனாளி சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுவன்
கேரளா மாநிலம், கண்ணூரில் உள்ள முழபிலங்காட்டை பகுதியை சேர்ந்தவர் 11 வயதான சிறுவன் நிஹால். இந்த சிறுவன் வாய்பேசமுடியாத ஒரு மாற்றுத்திறனாளி ஆகும். இவர் மாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து காணாமல் போனார்.
இவரது குடும்பத்தினர் சிறுவன் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருப்பதாக நினைத்து அலட்சியமாக இருந்துள்ளனர். பின்னர் சிறுவனைக் காணவில்லை எனத் தேடி வந்தனர், அப்போது அவர் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிறுவன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், அந்த சிறுவனின் உடலில் பல இடங்களில் நாய் கடித்த காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரால் பேசமுடியாததால் உதவியை நாட முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தெரு நாள்கள் அந்த சிறுவனை கடித்ததால் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, குழந்தை உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதன் மூலம், ஏபிசி திட்டத்தை செயல்படுத்துவதில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கப்படும் என, குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் கே.வி.மனோஜ் குமார் கூறியுள்ளார்.