ஒட்டு துணியில்லை..நிர்வாணமாக திருமணம் செய்யும் ஜோடிகள் - இப்படி ஒரு வினோதமா?
29 ஜோடிகள் நிர்வாணமாக திருமணம் செய்துக்கொள்ளும் வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
நிர்வாண திருமணம்
திருமணம் என்பது ஆயிரக்காலத்து பந்தம் என்று கூறப்படுவதுண்டு. இந்த திருமணம் ஒருவரது வாழ்க்கை மிக முக்கியமான நிகழ்வாகும். அப்படி இந்த உலகில் உள்ள கலாச்சாரங்கள், வழக்கம். மதம் ஆகியவற்றைப் பொறுத்து திருமண முறைகள் வேறுப்படலாம்.
ஆனால் இங்கு ஒரு இடத்தில் நிர்வாண திருமணங்கள் என்பது சகஜமாகியுள்ளது. இந்த முறையில் நடக்கும் திருமணத்தில் மணமகன் - மணமகள், மாப்பிளை வீட்டார், பெண் வீட்டார், விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் என அனைவரும் நிர்வாணமாக இருப்பார்கள் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் தொடங்கியுள்ளது. ஜமைக்காவில் ரன்அவே என்ற பகுதியில் ஹெடோனிசம் ரிசார்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை வழங்கி வருகிறது. அசாதாரணமானவற்றை விரும்புபவர்களுக்காக இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜோடிகள்
அதன்படி முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர்.இதைத்தொடர்ந்து, கடந்த 2003 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 29 ஜோடிகளுக்கு இதுபோல அங்கு வைத்து நிர்வாண திருமணம் நடந்துள்ளது.
வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அவர்களும் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில் பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்
. இது குறித்து ரிசார்ட் தரப்பு தெரிவித்திருப்பதாவது, கணவன் மனைவி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பதாக கூறியுள்ளது.