டிரம்ப் உடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன்; ஆடிப்போன நீதிமன்றம் - போட்டுடைத்த ஆபாச பட நடிகை!
டொனால்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என ஆபாச பட நடிகை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் உறவு
கடந்த 2006-ம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் (77). ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் (எ) ஸ்டோர்மி டேனியல்ஸ் (45) என்றவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதனையடுத்து, 2016-ம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.
அப்போது அவர் ஆபாச பட நடிகையுடன் தனிமையில் இருந்த செய்தி ஊடகங்களில் வெளியானால் அவரால் ஜெயிக்க முடியாமல் போய்விடும் என்பதால் இந்த ரகசியம் தெரியாமல் இருக்க அந்த நடிகைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் டிரம்ப் கொடுத்தார்.
அந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும் வழக்கறிஞருக்கு பணம் செலுத்திய ஆவண பதிவுகளை மாற்றிய குற்றச்சாட்டின் வழியாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவகாரம் மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கப் போகும் தேர்தல் களத்தில் டிரம்ப் உள்ள நிலையில் தற்போது,
ஆபாச பட நடிகை
அவர் பணம் கொடுத்து மறைத்த விஷயம் வெளிவந்துவிட்டது. இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் ஸ்டோர்மி டேனியல்ஸிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், “கடந்த 2006ம் ஆண்டில் லேக் தஹோவில் நடந்த பிரபல கோல்ஃப் போட்டியில் டிரம்ப்பை சந்தித்தேன்.
அப்போது எனக்கு 27 வயது. டிரம்ப் எனது தந்தையை விடவும் மூத்தவர். இரவு உணவு சாப்பிட டிரம்ப் என்னை அழைத்தார். நான் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். எனது சம்மதத்துடன்தான் அவர் என்னை அணுகினார்.” இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் தன்னை செல்லப் பெயரிட்டு அழைத்தது,
ஆடைகளை களைந்தது என பாலியல் ரீதியான நிகழ்வுகளை ஸ்டோர்மி டேனியல்ஸ், மிகவும் வெளிப்படையாக கூறியது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகளை மிகவும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது.