தேர்தலில் போட்டியிட ட்ரம்ப்புக்கு தகுதியே இல்ல - நீதிமன்றம் கருத்து
அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப்புக்கு தகுதி இல்லையென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தல்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டி டிரம்ப். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியைத்தழுவினார். ஆனால் அதனை ஏற்க மறுத்தார்.
தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடாலில் நுழைந்து போராட்டம் நடத்தினர். அந்த சமயத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இதுகுறித்து அமெரிக்காவில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், "அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த விதிமீறல் காரணமாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை டொனால்டு டிரம்ப் இழந்துவிட்டார்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான வாக்குச் சீட்டில் டொனால்டு டிரம்ப் பெயரை தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.