முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பேன் - டொனால்ட் டிரம்ப் சர்ச்சை பேச்சு!
மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சில நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய மீண்டும் தடை விதிப்பேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் மீண்டு போட்டியிடுகிறார். இந்நிலையில் குடியரசு கட்சியின் யூதர்களுக்கான ஆதரவு மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசியதாவது "நான் அதிபராக இருந்த போது, 2017ல் சிரியா, ஈரான் உட்பட குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தேன். இதனால், என்னுடைய ஆட்சியின்போது, அமெரிக்காவில் எந்த ஒரு பயங்கரவாத சம்பவமும் நடக்கவில்லை. தற்போது எங்கு பார்த்தாலும் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், மீண்டும் அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடையை மீண்டும் விதிப்பேன்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே சண்டை நடக்கிறது. இதில் யூத இன மக்களுக்கு எதிராக, பல நாடுகள் கைகோர்த்துள்ளன. நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்க விட்டிருக்க மாட்டேன். இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு என்னுடைய முழு ஆதரவு உள்ளது. தற்போது நம் நாட்டின் எல்லைகளை திறந்து விட்டு, அதிபர் ஜோ பைடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
வெள்ளை மாளிகை எதிர்ப்பு
எல்லைகளை மூடுவேன். முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பேன். மூன்றாம் உலகப் போர் உருவாவதை தடுப்பேன்" என்று டிரம்ப் பேசினார். இந்நிலையில் அவரின் இந்த பேச்சுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரூ பேட்ஸ் கூறியுள்ளதாவது "முன் எப்போதையும்விட, தற்போது உலகளவில் மத, இனப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் உள்ள முஸ்லிம், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கர் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் மதம், இனத்தை பார்க்கக் கூடாது. எந்த மதத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்க முடியாது.
மனிதகுல கண்ணியத்தை, இணக்கத்தை ஜோ பைடன் வலியுறுத்துகிறார்" என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் மதம், இனத்தை பார்க்கக் கூடாது. எந்த மதத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்க முடியாது. மனிதகுல கண்ணியத்தை, இணக்கத்தை ஜோ பைடன் வலியுறுத்துகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, யேமன், இராக, சூடான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் அந்தத் தடையை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.