கூரையை பிய்த்து வந்த அதிர்ஷ்டம்..ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன நபர் - அப்படி என்ன பொருள்?

Indonesia World Social Media
By Swetha Nov 13, 2024 10:30 AM GMT
Report

விண்கல்லால் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன நபர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்டம்

இந்தோனேஷியா, வடக்கு சுமத்ராவின் கோலாங் பகுதியை சேர்ந்தவர் வெல் ஜோஸ்வா. கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் தங்கியிருந்த வீட்டின் கூரையில் ஒரு மிகப்பெரிய கல் ஒன்று விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் அந்த கல் தரையைப் பிளந்து கொண்டு 15 சென்டி மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டது.

கூரையை பிய்த்து வந்த அதிர்ஷ்டம்..ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன நபர் - அப்படி என்ன பொருள்? | Stone Fell From Sky Man Got Lucky In Overnight

நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அந்த கல்லை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் அந்த கல் பூமியில் இருக்கக் கூடியது கிடையாது என்பதை உறுதி செய்தார். பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டதில் அதன் எடை சுமார் 2 கிலோ என்பதும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தெரியவந்தது.

திடீர் பணக்காரரான தினக்கூலி தொழிலாளி; கால்வாயில் அடித்த அதிர்ஷ்டம் - கடைசியில் ட்விஸ்ட்!

திடீர் பணக்காரரான தினக்கூலி தொழிலாளி; கால்வாயில் அடித்த அதிர்ஷ்டம் - கடைசியில் ட்விஸ்ட்!

கோடீஸ்வரர் 

மிக மிக இந்த கல் குறித்து அறிந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் காலின்ஸ் என்ற தொழிலதிபர் இந்தோனேஷியாவுக்கு நேரடியாகச் சென்று இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய் கொடுத்து அதை வாங்கியுள்ளார்.

கூரையை பிய்த்து வந்த அதிர்ஷ்டம்..ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன நபர் - அப்படி என்ன பொருள்? | Stone Fell From Sky Man Got Lucky In Overnight

கிராமப்புறங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் என்று கூறப்படுவது உண்டு. சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வரும் ஜோஸ்வாவின் வீட்டு கூறையை பிய்த்து வந்த இந்த அறிய விண்கல்லால் ஒரே நாள் இரவில் ரூ. 14 கோடி ரூபாய்க்கு அதிபராக மாறினார்.

இந்த நிகழ்வு குறித்து ஜோஸ்வா பேசியதாவது, ‘‘நான் சவப்பெட்டிகள் தயாரித்து வந்தேன். அதில் எனக்கு அதிக வருமானம் கிடைக்கவில்லை. இப்போது எனது வாழ்க்கை மாறியுள்ளது. எனக்குக் கிடைத்த பணத்தில் ஒருபகுதியை தேவாலயம் கட்டுவதற்குப் பயன்படுத்த விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.