ஆப்பிள், ஃபேஸ்புக் ஓனர்கள் வழிபட்ட கோவில்; அதுவும் இந்தியாவில் - என்ன ஸ்பெஷல், எங்குள்ளது தெரியுமா?
இந்தியாவில் உள்ள கோவில் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
கைஞ்சி தாம்
உத்தரகாண்ட், நைனிடாலில் அமைந்துள்ளது கைஞ்சி தாம் ஆசிரமம். இது ஒரு அனுமன் கோயில் மற்றும் ஆசிரமம் ஆகும். இது 1960களில் நீம் கரோலி பாபாவால் கட்டப்பட்டது.
இந்த ஆசிரமம் மலைகள், மரங்கள் மற்றும் ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. நீம் கரோலி பாபா 1973-ல் இறந்தார். ஆனால், இன்றும் பல உயர்மட்ட அமெரிக்கர்கள் அவரை நம்புவதாக கூறப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் 15ம் தேதி கண்காட்சி நடைபெறும்.
அமெரிக்கவர்கள் நம்பிக்கை
அப்போது வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், ஃபேஸ்புக் தொடங்குவதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில் இந்தியா வந்து இந்தக் கோயிலுக்குச் சென்றதாக மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது அவரிடம் தெரிவித்துள்ளார்.
கைஞ்சி தாம் ஆசிரமத்திற்குச் சென்ற பிறகுதான் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்க மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தனது செயலை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.