3வது பெண் குழந்தைக்கு தந்தையான மார்க் ஜூக்கர்பர்க் - வைரல் ஃபோட்டோஸ்

Meta
By Sumathi Mar 25, 2023 10:42 AM GMT
Report

மார்க் ஜூக்கர்பர்க் தனது 3வது பெண் குழந்தையை வரவேற்றுள்ளார்.

மார்க் ஜூக்கர்பர்க் 

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் கடந்த 2012ம் ஆண்டு பிரிசில்லா சான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரிசில்லா சான், மார்க் ஸூகர்பெர்க் உடன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவி.

3வது பெண் குழந்தைக்கு தந்தையான மார்க் ஜூக்கர்பர்க் - வைரல் ஃபோட்டோஸ் | Mark Zuckerberg Welcomes Baby Daughter Photo

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மார்க் ஜூக்கர்பர்க் தம்பதிக்கு சமீபத்தில் மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

3வது குழந்தை

இதுதொடர்பான அறிவிப்பை மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து குழந்தையை வரவேற்றுள்ளார். அதில், "உலகிற்கு வருக அரேலியா சான் ஜூக்கர்பெர்க்! நீ எங்களின் சிறிய ஆசீர்வாதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

3வது பெண் குழந்தைக்கு தந்தையான மார்க் ஜூக்கர்பர்க் - வைரல் ஃபோட்டோஸ் | Mark Zuckerberg Welcomes Baby Daughter Photo

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.